என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » போலீஸ் கமிஷனர் அலுவலகம்
நீங்கள் தேடியது "போலீஸ் கமிஷனர் அலுவலகம்"
டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. #Jactogeo
ஜாக்டோ- ஜியோ போராட்டத்துக்கு ஆதரவாக காவல்துறை அமைச்சு பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் காவல்துறை அலுவலகங்களில் சுமார் 5 ஆயிரம் அமைச்சுப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சென்னையில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குட்பட்ட இடங்களில் சுமார் 500 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மட்டும் 200 பேர் வேலை செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற பணியில் இருப்பவர்கள் போலீசாரின் அலுவல் சார்ந்த பணிகளை அன்றாடம் மேற்கொள்வார்கள். போலீசார் தொடர்புடைய ஓய்வூதியம், சம்பளம், பில்போடுவது உள்ளிட்ட பணிகளை அமைச்சு பணியாளர்களே மேற்கொண்டு வருகிறார்கள்.
கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் அளிக்கும் பல்வேறு மனுக்களையும் இவர்களே கையாண்டு வருகிறார்கள்.
உதாரணத்துக்கு கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வரும் ஒருவர் அதற்கான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றால் அதற்கான ஆவணங்களை கமிஷனர் அலுவலகத்தில் நேரில் வந்தே தாக்கல் செய்ய வேண்டும்.
இதேபோல சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓட்டல்களை நடத்துபவர்கள், உடற்பயிற்சி கூடம் நடத்துபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துபவர்களும் தங்களது நிறுவனம் தொடர்பான உரிமத்தை புதுப்பிப்பதற்காக விண்ணப்பம் செய்வார்கள். இதுபோன்ற பணிகளுக்காக கமிஷனர் அலுவலகம் வரும் பொதுமக்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். கடந்த 24-ந் தேதி முதல் பணிகள் முடங்கியுள்ளன.
இதேபோல டி.ஜி.பி. அலுவலகத்திலும் காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கும் அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகங்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பப்படும் சுற்றறிக்கைகளும் அனுப்பப்படவில்லை.
காந்தி நினைவு நாளை யொட்டி உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்காக 2 நாட்களுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்படும். இந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களிலும் அமைச்சுப் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த 22-ந்தேதி முதல் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் முதல் 2 நாட்கள் அவர்களுக்கு ஆதரவாக சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றிய அமைச்சுப் பணியாளர்கள் உணவு இடைவேளையின்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 24-ந்தேதி முதல் அவர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #Jactogeo

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வலியுறுத்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டது. #BigBosstamil
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் லூயிசாள் ரமேஷ் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான கமல்ஹாசன் பிக்பாஸ்-2 என்ற நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் தனது கட்சியை வளர்க்கும் வகையில் பேசுகிறார்.
ஆனால் அரசியல் அநாகரிகத்துடன் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலிதாவை கொச்சைப்படுத்தும் விதமாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் பேசி வருகிறார். ஜெயலலிதாவை சர்வாதிகாரி போன்று சித்தரித்து இந்த நிகழ்ச்சியில் பேசப்படுகிறது.
ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிக்பாஸ்-2 நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும். இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BigBosstamil

போர்வேல் பராமரிப்பவர்கள் குடிநீர் விநியோகிக்காததால் இது குறித்து பெண்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கொண்டலாம்பட்டி
சேலம் குகை ஆண்டிப்பட்டி வசந்தம் நகர் பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த பகுதியில் 133 வீடுகள் உள்ளன. கடந்த 25 நாட்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இது குறித்து சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் ரோகிணியிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கரிடம் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் போர்வேல் மூலம் எங்கள் குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது தண்ணீர் விநியோகிக்கப்படாததால் நாங்கள் இது குறித்து போர்வேல் பராமரிப்பவர்களிடம் கேட்டோம். அவர்கள் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
இது குறித்து உரிய விசாரணை நடத்தி போலீஸ் கமிஷனர் சங்கர் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.
×

X